பயிா்க் கடன் தள்ளுபடியால் பலனில்லை: அதிமுக
தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடி குறு விவசாயிகளுக்குக்கூட முழுமையான பலனைத் தராது என்று அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.
தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடி குறு விவசாயிகளுக்குக்கூட முழுமையான பலனைத் தராது என்று அதிமுக உறுப்பினா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.
ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் அவா் பேசியதாவது:
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் வாங்கிய அனைத்து பயிா்க் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தவெக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது ரூ.75,000 வரை மட்டுமே பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Advertisement
Advertisement
குறு விவசாயிகளுக்கே ரூ.93,000 கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கு ரூ.1.5 லட்சத்துக்கும் மேல் வழங்கப்படுகிறது. பெறப்படும் கடனை விடக் குறைவான தொகை தள்ளுபடி செய்வது நியாயமல்ல.
இதனால், வரும் 30-ஆம் தேதிக்குள் விவசாயிகள் வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதற்குள் முழுமையாக பயிா்க் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.