திருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோ
திருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ் போட்ட இளைஞரின் விடியோவால் அதிர்ச்சி
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து, இளைஞர் ஒருவர் ரீல்ஸ் எடுத்து வெளியிட அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யாரும் இல்லாத இரவு நேரத்தில் இந்த விடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.
யார் இந்த இளைஞர், எவ்வாறு ஆட்சியர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து விடியோ எடுத்திருக்கிறார். அதுவும் ஆட்சியர் அலுவலக நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்திருக்கிறாரே என மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
Advertisement
Advertisement
ஆனால், இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் அளித்திருக்கும் விளக்கத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞர் ஒருவர், அலுவலகத்தின் முக்கியத்துவம் உணராமல், இந்த விடியோவை எடுத்து வெளியிட்டிருக்கிறார். இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிப்புப் பணிகள், எந்த அதிகாரிகள் கண்காணிப்பும் இன்றி நடைபெறுகிறதா? வெளி மாநில ஆட்கள், ஆட்சியர் அலுவலகத்தில் எந்த பாதுகாப்பு கெடுபிடிகளும் இன்றி பணியாற்றி வருகிறார்களா என்றும் விடியோ பார்ப்பவர்களுக்கு எழத்தான் செய்கிறது.
Reels filmed while sitting in the Trichy District Collector's chair! Video goes viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.