அதர்வாவின் இதயம் முரளி படத்தின் படப்பிடிப்பு விடியோ!
இதயம் முரளி படத்தின் பிடிஎஸ் விடியோ வெளியானது தொடர்பாக...
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி படத்தின் படப்பிடிப்பு விடியோ வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கும் இதயம் முரளி என்ற புதிய திரைப்படத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்து முடித்துள்ளார்.
நடிகர்கள் ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Advertisement
Advertisement
முன்னதாக, இதயம் முரளி திரைப்படத்தின் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தமன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம், வரும் ஜூலை 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதயம் முரளி படத்தின் படப்பிடிப்புபோது எடுக்கப்பட்ட விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.