சத்யபாமா சர்ச்சை விடியோ சித்திரிக்கப்பட்டதா? ஆதவ் விளக்கம்
தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் விடியோவை ஏஐ விடியோ என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் விடியோவை ஏஐ விடியோ என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தலுக்காக ரூ. 31 கோடி செலவழித்ததாக தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா பேசும் விடியோ ஒன்று, இன்று காலையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சத்தியபாமாவின் விடியோ குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "மு.க.ஸ்டாலின் குறித்த விடியோவை நானும் நாளை வெளியிடுகிறேன். இதெல்லாம் ஏஐ விடியோதான. வாக்குப்பதிவு நாளில் காலை 10 மணிக்கு வெளியாகும்போதே தெரியவில்லையா?" என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து மீண்டும் தாராபுரம் இடைத்தேர்தல் வேட்பாளராக களம் இறங்கினார்.
தாராபுரத்தில் இன்று (அக். 6) வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், காலையில் சத்தியபாமா பேசும் சர்ச்சை விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பியது.
அந்த விடியோவில், “கடந்த முறை ரூ. 31 கோடி செலவு செய்திருக்கிறேன். ஆனால், ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை. அந்த மாதிரி இருந்துவிட்டு இந்த நாய்கள்கூட சேருவது என்பது என்னால் சத்தியமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அமைச்சர்கள் தங்குவதற்கு அறைகள் (ரிசார்ட்) பதிவு செய்ததற்கு மட்டும் ரூ. 14 லட்சம் செலவு செய்திருக்கிறோம். நம்மலும் ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் முடியாது என்று சொல்ல முடியாது. மேலும், கூட்டணி கட்சியினரும் விமானத்தில் வருவதற்காக டிக்கெட் செலவுகளும் இருக்கின்றன” என்று பேசுவது போல பதிவாகியிருந்தது.
இந்த விடியோ குறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் குறித்து சட்தியபாமா பேசுகையில், “அந்த மாதிரி பேச்சுலாம் இல்ல.. அது சித்தரிக்கப்பட்டது. இது தேர்தலில் எதிரொலிக்காது. தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பாக புகார் கொடுப்பேன்” என்றார்.
இந்த விடியோ பரவி வரும் நிலையில் எதிர்க்கட்சியினர், சமூக வலைதளவாசிகள் சத்யபாமாவின் இந்தப் பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விடியோ உண்மையானதா? அல்லது போலி விடியோவா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Minister Aadav Arjuna clarifies that the viral video purportedly featuring TVK candidate Sathyabhama is an AI-generated video
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.