FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அயனாவரம் காவல் நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீர் ஆய்வு!

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீரென ஆய்வு மேற்கொண்டிருப்பது பற்றி....

6 வினாடிகள் முன்பு
அயனாவரம் காவல் நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பகிர்:

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகள் நாளை முன்னிட்டு, சென்னை வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திடீரென அயனாவரம் காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, காவல் நிலையத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள புகார்களின் தற்போதைய நிலை குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு எவ்வித காலதாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அச்சமின்றி காவல் நிலையத்தை அணுகும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்றும், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து அமைதியான சூழல் நிலவுவதற்கு முழு ஒத்துழைப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரின் இந்தத் திடீர் காவல் நிலைய ஆய்வு அப்பகுதியில் கவனத்தைப் பெற்றது.

summary

Minister Aadhav Arjuna conducted a sudden inspection at the Ayanavaram police station in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.