FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மத்திய கப்பல் துறை அமைச்சருடன் ஆதவ் அர்ஜுனா சந்திப்பு: 5 திட்டங்களுக்கு நிதி வழங்க கோரிக்கை!

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் உடன் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சந்தித்தது குறித்து...

51 வினாடிகள் முன்பு
ஆதவ் அர்ஜுனா, சர்பானந்த சோனாவால் - படம் - எக்ஸ்
பகிர்:

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை தில்லியில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செவ்வாய்க்கிழமை (நவ. 17) சந்தித்தார்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இன்று (17.11.2026) புதுதில்லியில், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவாலை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியுதவிக்கான கோரிக்கை மனுவை அளித்தார்.

பின்வரும் திட்டங்களுக்கு உடனடி நிதியுதவி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

  1. இராமேஸ்வர துறைமுக மேம்பாடு (இராமேஸ்வரம் – தலைமன்னார் (இலங்கை) பன்னாட்டு பயணிகள் படகு போக்குவரத்து துவங்குதல் – ரூ. 118 கோடி 

  2. கடலூர் பசுமை வள ஆழ்கடல் துறைமுக மேம்பாடு – ரூ. 4,700 கோடி 

  3. கடல் நடைபாதைகள் மற்றும் படகுத் துறைகள் அமைத்தல் (சென்னை மெரீனா, மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி) – சென்னை -  புதுச்சேரி பயணிகள் படகு போக்குவரத்து தொடங்குதல் – ரூ.900 கோடி

  4. பக்கிங்காம் கால்வாய் புனரமைத்தல் மற்றும் ஆழப்படுத்துதல் (தேசிய நீர்வழி – 4) – ரூ. 2,700 கோடி

  5. மேற்கு மற்றும் கிழக்கு கடல் பகுதியை இணைக்கும் பாம்பன் கால்வாயை 10 மீட்டருக்கு ஆழப்படுத்துதல் – ரூ.1,200 கோடி

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை  முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்அன்பழகன் மற்றும் உயர் அலுவலர்கள்  உடனிருந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Tamil Nadu Public Works Minister Adhav Arjuna met with the Union Minister for Ports, Shipping and Waterways, Sarbananda Sonowal, in Delhi on Tuesday (Nov. 17).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.