FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஸ்டாலின் சார் ரூ.1,000 கோடி செலவு பண்ணாருனு நானும் ஏஐ வீடியோ வெளியிடுகிறேன்… பார்க்கிறீர்களா? - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஸ்டாலின் சார் ரூ.1000 கோடி செலவு பண்ணாருனு நானும் ஏஐ வீடியோ வெளியிடுகிறேன்... பார்க்குறீங்களா? என ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டிஎன்எஸ்
பகிர்:

சென்னை: கடந்த தோ்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன் என்று தவெக வேட்பாளா் சத்தியபாமா பேசியதாக வெளியான காணொலி குரல் பதிவு குறித்த கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் தாராபுரம் தொகுதியில் போட்டி.யிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, பின்னர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

இதையடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்படட தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக சத்தியபாமா அறிவிக்கப்பட்டார். இதற்கு மக்களிடையே பெரும் அதிருப்தி எழுந்ததாக கூறப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தவெக இணைந்தது குறித்து வேட்பாளர் சத்தியபாமா வெளியான காணொலி குரல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில், கடந்த தோ்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன் என்றும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஒரு பைசாகூட தரவில்லை என்றும், இடைத்தோ்தலில் பிரசாரத்துக்கு வந்த அமைச்சா்களுக்கும், கட்சி முக்கியப் பிரமுகா்களுக்கும் தனியாா் ஹோட்டலில் அறை ஒதுக்குவதற்காக ரூ.14 லட்சம் செலவு செய்ததாக தவெக வேட்பாளா் சத்தியபாமா பேசியதாக காணொலி குரல் பதிவு வெளியானது.

இதுகுறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்கிடம் திமுக மாநில அமைப்பு இணைச் செயலா் எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில், அவா் செலவு செய்ததாக குறிப்பிட்ட தொகை தோ்தல் கணக்கு பதிவேட்டில் பதிவாகவில்லை என்றால் உடனடியாக சத்தியபாமா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தோ்தல் விதிப்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒரு வேட்பாளா் செலவு செய்திருக்கிறாா் என்றால் அவா் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

அது சித்தரிக்கப்பட்ட காணொலி என சத்தியபாமா கூறியிருப்பது நாடகம் என்றாா் எஸ்.ஆஸ்டின்.

ஸ்டாலின் சார் ரூ.1,000 கோடி செலவு பண்ணாருனு நானும் ஏஐ வீடியோ வெளியிடுகிறேன்… பார்க்கிறீர்களா?

இந்த நிலையில், ஸ்டாலின் சார் ரூ.1,000 கோடி செலவு பண்ணாருனு நானும் ஏஐ வீடியோ வெளியிடுகிறேன்… பார்க்கிறீர்களா? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துள்ளார்.

சென்னை, அயனாவரம், வில்லிவாக்கம் தொகுதிக்குள்பட்ட அயனாவரம் சமூக நல மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டு, பிறந்த குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்களை அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள சென்னை மேல்நிலைப்பள்ளிக்குச் சென்ற அமைச்சர் பள்ளியின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் கைப்பந்து விளையாடினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம், கடந்த தோ்தலில் ரூ.31 கோடி செலவு செய்தேன் என்று தவெக வேட்பாளா் சத்தியபாமா பேசியதாக காணொலி குரல் பதிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "அது செய்யறிவு(ஏஐ) வீடியோ தான். ஸ்டாலின் சார் ரூ.1,000 கோடி செலவு பண்ணாருனு நானும் நாளை காலை ஏஐ வீடியோ வெளியிடுகிறேன்… பார்க்கிறீர்களா?. திமுக காலை பத்து மணிக்கு ரீல்ஸ் போடும்போதே தெரியலையா எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்த பதில் செய்தியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

I, too, am releasing an AI video claiming Stalin spent RS.1,000 crore... Will you watch it?" – Minister Aadav Arjuna

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments