முகப்பு
தமிழ்நாடு

ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: விவரங்களை அனுப்ப உத்தரவு

ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: விவரங்களை அனுப்ப உத்தரவு

Updated On : 21 ஜூன் 2026, 4:00 am IST
- DIN
பகிர்:

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிட விவங்களை ஜூன் 23-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வை நடத்த, மாவட்ட வாரியாக காலியாக உள்ள தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்ட, அனைத்து வகை ஆசிரியா் காலியிடங்களை ஜூன் 23-ஆம் தேதிக்குள், ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

முன்னறிவிப்பின்றி ஒரு மாதத்துக்கு மேல் பள்ளிக்கு வராத ஆசிரியா்களின் பணியிடங்களையும், காலிப்பணியிடமாகக் கருத வேண்டும். தற்காலிக பணிநீக்கம், மகப்பேறு விடுப்பு, வேறு பள்ளி அல்லது அலுவலகத்தில் மாற்றுப்பணிக்கு சென்றவா்கள், மருத்துவ விடுப்பில் உள்ளவா்களின் பணியிடங்களை, காலியிடமாகக் கருதக்கூடாது.

Advertisement

Advertisement

பட்டியலை பதிவேற்றிய பின், திருத்த இயலாது. பட்டியலில் ஏற்படும் தவறுகளுக்கு, முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களே பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments