நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம் ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று அவர் அளித்த பேட்டியில், நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தவெகவின் நிலைப்பாடு. ஒரு தேர்வைக் கூட மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் ஆகியும் தேர்வை நடத்துவதில் முதிர்ச்சியில்லை.
நீட் வினாத்தாளை கூட ஒழுங்காக சேர்க்க முடியவில்லை. தென் மாநிலங்களில் சிறப்பாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் தவறு நடக்கிறது. கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகவே இந்த தவறு நடக்கிறது.
Advertisement
Advertisement
கடந்த வாரம் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. இனியாவது தவறை உணர்ந்து நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சம்பந்தப்பட்ட சில நபர்கள் குறுக்கு வழியில் செயல்படுகிறார்கள்.
திமுக - அதிமுக இணைந்து தேர்தலை சந்திக்கட்டும் பார்க்கலாம். நான் முதல்வன் திட்டம் என்றால் மக்களுக்கு புரியவில்லை. மக்களுக்கு புரியாது என்பதால் திறன் மேம்பாடு திட்டம் என மாற்றப்பட்டுள்ளது. ஆனால் திட்டம் தொடர்கிறது.
தவெக ஆட்சியில் முதல் விஜய் மட்டும்தான் பவர் சென்டர். போன அரசு செய்த தவறுகளால் தொழில் முதலீடுகள் வெளியே சென்று விட்டது. இவ்வாறு குறிப்பிட்டார்.
Minister Nirmalkumar has stated that people did not understand what the 'Naan Mudhalvan' scheme meant.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.