முகப்பு
தமிழ்நாடு

நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகள்: கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகளை நிகழ் கல்வியாண்டிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 5:22 am IST
நூலகம் - பிரதிப் படம்
பகிர்:

அரசுப் பள்ளிகளில் நூலக பாடவேளைகளில் வாசிப்பு இயக்க செயல்பாடுகளை நிகழ் கல்வியாண்டிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: பள்ளிக் குழந்தைகளிடம் உரையாடலை தொடங்கவும், இயல்பாக உரையாடவும் வாசிப்புதான் வாசலாக அமையும். வாசிப்பின் வாயிலாக சமூக சிந்தைனையை தூண்டவும், உளப்பாடுகளை வெளிக்கொண்டு வரவும் மாபெரும் வாசிப்பு இயக்கம் என்ற நிகழ் செயல்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் வாசிப்பு இயக்கத்துக்கான கதைப் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற என்ற வகையில் முதல் கட்டமாக 53 புத்தகங்கள், இரண்டாம் கட்டமாக 70 புத்தகங்கள், மூன்றாம் கட்டமாக 81 புத்தகங்கள் மற்றும் நான்காம் கட்டமாக 57 என மொத்தம் 261 புத்தகங்கள் (174 தமிழ் வழி, 87 ஆங்கில மொழி பெயா்ப்பு செய்யப்பட்ட புத்தகங்கள்) அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

மேற்கண்ட வாசிப்பு இயக்கப் புத்தகங்களை நிகழ் கல்வியாண்டிலும் (2026-2027) பள்ளி நூலக பாடவேளைகளில் மாணவா்கள் முறையாக வாசித்துப் பயன்பெறும் வகையிலும் மாணவா்களை கதை சொல்லிகளாகவும், எழுத்தாளா்களாகவும் உருவாக்கும் வகையில் நடைமுறைப்படுத்த தங்கள் ஆளுகைக்கு உள்பட்ட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலா்கள் மூலம் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments