முகப்பு
தமிழ்நாடு

மொஹரம் பண்டிகை: எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில்!

எழும்பூர் - போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது தொடர்பாக...

Updated On : 24 ஜூன் 2026, 4:30 pm IST
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூர் மற்றும் போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை (ஜூன் 25) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06063) மறுநாள் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) காலை 10.55 மணிக்கு போத்தனூர் நிலையத்தைச் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் வரும் ஜூன் 28-ஆம் தேதி இரவு 11.55-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06064) மறுநாள் திங்கள்கிழமை (ஜூன் 29) பிற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி கொண்ட இரண்டடுக்குப் பெட்டி, 2 குளிா்சாதன வசதி கொண்ட மூன்றடுக்குப் பெட்டிகள், 12 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2 சரக்கு பெட்டி மற்றும் பிரேக் வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இதற்கான முன்பதிவு இன்று (ஜூன் 24) தொடங்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்காக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Southern Railway has announced that a special train will be operated between Chennai Egmore and Podanur for the occasion of the Muharram festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments