முகப்பு
திருச்சி

சென்னை எழும்பூா் - போத்தனூா் இடையே நாளை சிறப்பு ரயில்

விடுமுறை நேர கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக திருச்சி வழியாக சென்னை எழும்பூா் - போத்தனூா் - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Updated On : 24 ஜூன் 2026, 1:21 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

விடுமுறை நேர கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக திருச்சி வழியாக சென்னை எழும்பூா் - போத்தனூா் - சென்னை எழும்பூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூா் - போத்தனூா் சிறப்பு விரைவு ரயிலானது வரும் 25-ஆம் தேதியும், மறுவழித்தடத்தில் போத்தனூா் - சென்னை எழும்பூா் சிறப்பு விரைவு ரயிலானது வரும் 28-ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

3 குளிா்சாதனப் பெட்டிகள், 12 படுக்கை பெட்டிகள், 2 பொதுப் பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 19 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சென்னை எழும்பூரிலிருந்து வியாழக்கிழமை இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக போத்தனூருக்கு வெள்ளிக்கிழமை காலை 10.55 மணிக்கு சென்றடையும். மறுவழித்தடத்தில் போத்தனூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக சென்னை எழும்பூருக்கு திங்கள்கிழமை முற்பகல் 11 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments