போத்தனூா் - சென்னை இடையே சிறப்பு ரயில்
கோவை, போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, போத்தனூா் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பயணிகள் வசதிக்காக போத்தனூரில் இருந்து ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - சென்னை சிறப்பு ரயில் (எண்: 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக சென்னையில் இருந்து ஜூலை 3 முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.45 மணிக்குப் புறப்படும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
Advertisement
இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், மொரப்பூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.