தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைதான்: தவெகவினருக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி எச்சரிக்கை
தவெக நிர்வாகிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்படுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி குற்றச்சாட்டு குறித்து...
தவெக நிர்வாகிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்படுவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகரில் நடைபெற்ற சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசளிக்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியதாவது, "தவெக எம்.எல்.ஏ.க்கள் மீது என்ன அவதூறுகள் பரப்பினாலும், அவற்றை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள். எங்களுடைய கட்சி நிர்வாகிகள் மீது பொய்ப் புகார்கள் வைக்கப்படுகின்றன.
எங்கள் கட்சி நிர்வாகி மீது ஏதேனும் புகார் வந்தால், அதன் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், பொய்யான புகார்கள் உருவாக்கப்பட்டு, எங்கள் மீது களங்கம் சுமத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
அதே வேளையில், தவறு செய்பவர் எங்கள் நிர்வாகியாக இருந்தாலும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார். இதனைத்தான் முதல்வரும் கூறுகிறார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனைதான். அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
Minister Jegadeeswari warns TVK members
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.