FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி! செம டுவிஸ்ட்

அமைச்சர் கீர்த்தனா பெயர் ஏன் முதலில் இடம்பெற்றது என அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்வி

Updated On : 26 ஜூன் 2026, 9:20 am IST
அமைச்சர் ஜெகதீஸ்வரி - X
பகிர்:

விருதுநகரில் இன்று நடைபெற்ற விளையாட்டுத் துறை தொடர்பான நிகழ்ச்சியில் என் பெயர்தான் முதலில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகரில் சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா இன்று காலை தொடங்கியது.

விழாவுக்கான பேனரில், தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலில் இருந்தது. அதனைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பெயர் இடம்பெற்றிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் ஜெகதீஸ்வரி, தன்னுடைய துறை சார்ந்த நிகழ்ச்சி மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற நிலையில், தன்னுடைய பெயர்தானே பேனரில் முதலில் இருக்க வேண்டும், ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை முதலில் வைத்தீர்கள் என்று விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வந்த மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர்களின் வரிசையில் தொழில்துறை அமைச்சர் என்ற முறையில் கீர்த்தனா பெயர் முதலில் போடப்பட்டிருக்கலாம் என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொண்டனர். அமைச்சர் ஒருவர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் மிகப்பெரிய திருப்புமுனையாக, பேனரில் முதலில் பெயர் போடப்பட்டிருந்த அமைச்சர் கீர்த்தனா, நிகழ்ச்சிக்கு வரவேயில்லை என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments