இது சட்டப்பேரவையா? சினிமா தியேட்டரா? உதயநிதி கேள்வி
சட்டப்பேரவையின் தரத்தை ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருப்பதாக தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
சட்டப்பேரவையின் தரத்தை ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருப்பதாக தவெக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தஞ்சாவூரில் திமுக பொதுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, "இன்றைய தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை இந்த ஆட்சி, அதல பாதாளத்தில், படுகுழியில் தள்ளியுள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் சட்டப்பேரவையில் பேசினோம். ஆனால், முதல்வரிடம் அதற்கான ஒரு பதிலுமில்லை
சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் செய்த கூத்துகளைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். இது சட்டப்பேரவையா? அல்லது சினிமா தியேட்டரா? என்று கேள்வியெழுப்புகிற அளவுக்கு சட்டப்பேரவையின் தரத்தை ஆளுங்கட்சியினர் குறைத்துக் கொண்டிருக்கின்றனர்.
Advertisement
Advertisement
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்த பணிகளால் நல்லது நடந்தால், அதற்கு ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். ஆனால், எதுவும் பிரச்னை என்றால், அதற்கு திமுகதான் காரணம் என்ற ரெடிமேட் பதிலையும் கூறுகின்றனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சிறுமைப்படுத்தும் நோக்கில், அவரைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் பேசுகிறார். ஆனால், அவர் ஒருபோதும் தேடிக் கண்டுபிடிக்கிற இடத்தில் இருந்தது கிடையாது.
இன்று மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் திட்டங்களின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் மு.க. ஸ்டாலின் இருக்கிறார்.
அதே வேளையில், முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் அவரை தொகுதி மக்கள் தேடி வருகின்றனர். இந்த ஆட்சியில் ஒட்டுமொத்த தமிழ்நாடும் மின்சாரத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளும் நன்றாக இருந்த சட்டம் - ஒழுங்கை மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
சட்டப்பேரவையில் அவர் (முதல்வர் விஜய்) இன்னும் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்தக் கூட்டத்தொடரில் அதுவும் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
Udhayanidhi Stalin accuses the ruling party of lowering the standards of the Legislative Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.