போதைப்பொருள்: அமைச்சர் சரத்குமார் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார்!
அமைச்சர் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையரிடம் புகார்...
அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது தவெக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ள சரத்குமார், 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு ஐபிஎல் போட்டியின்போது மைதானத்தில் வைத்து போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஒரு விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுபற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனத்துடன் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் சரத்குமார் இதுபற்றி விளக்கமளித்து விடியோ ஒன்றை வெளியிட்டார்.
Advertisement
Advertisement
ஐபிஎல் போட்டிக்கு குடும்பத்துடன் சென்றபோது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே மாத்திரையை நொறுக்கி வழங்கியதாகக் கூறியிருந்தார்.
எனினும் அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் இன்று (ஜூன் 29) போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அமைச்சர் சரத்குமார் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் சரண்யா என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
Drug issue: Complaint against Minister Sarathkumar to Chennai Police Commissioner
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.