பார்க்கிங் பகுதியில் ‘பிளேடு’ சைக்கோ! பைக் சீட்டுகளை கிழித்தெறிந்து அட்டகாசம்!
கோவையில் பைக் சீட்டுகளை கொடூரமாகக் கிழித்து எறியும் நபர் குறித்து...
கோவையில் வாகன நிறுத்துமிடங்களில் இருசக்கர வாகன சீட்டுகளை கொடூரமாகக் கிழித்து எறியும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளன.
கோவை டவுன்ஹால் பிரபல துணிக்கடை அருகே உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை, மர்ம நபர் ஒருவர் பிளேடால் கொடூரமாகக் கிழித்துச் சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வணிகப் பகுதியான டவுன்ஹால் பகுதியில், பிரபல துணிக்கடை அருகே இருசக்கர வாகனங்கள் வாகன நிறுத்தப் பகுதிகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அங்கு உள்ள வாகன நிறுத்தப் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகளின் சீட்டுகளை அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனது கையில் வைத்து இருந்த கூர்மையான பிளேடால் கிழித்து எறிந்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல நடந்து சென்று உள்ளார்.
பின்னர், வந்து பார்த்த வாகன ஓட்டிகள், தங்களது புத்தம் புதிய பைக்குகளின் சீட்டுகள் அனைத்தும் கிழிந்து பஞ்சு வெளியே வந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த நபர் செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது கோவையின் சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி, பொதுமக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
CCTV footage of a person viciously tearing up and discarding two-wheeler parking slips in Coimbatore has gone viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.