முகப்பு
தமிழ்நாடு

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!

முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியுள்ளது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 9:54 am IST
ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு
பகிர்:

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான 2- வது நாள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை, நிா்வாகம், நலத் திட்டங்கள் மற்றும் முதலீடுகள் ஈா்ப்பு, தொழில் வளா்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க ஆண்டுதோறும் முதல்வா் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான மாநாடு நடைபெறுவது வழக்கம்.

தவெக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறையாக முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் (ஜூன் 29, 30) மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று (ஜூன் 29, திங்கள்) தொடங்கியது.

Advertisement

Advertisement

நேற்று நடைபெற்ற மாநாட்டில் மக்களின் அடிப்படை வசதிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அதன்படி ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிகளில் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். அதேபோல சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளிலும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து 2-வது நாளாக இந்த மாநாடு தலைமைச் செயலகத்தில் முதல் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கியுள்ளது. மாலை 6 மணி வரை மாநாடு நடைபெறும்.

மாநாட்டில், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், மாவட்ட வன அலுவலா்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் சட்டம் - ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பொது சுகாதாரம், போதையில்லா தமிழ்நாடு, அரசுத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

summary

Second-day conference of IAS and IPS officers chaired by Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments