முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூரில் மார்ச் 4-ல் விஜய் பங்கேற்கும் தவெக கூட்டம்: காவல் துறை அனுமதி!

தஞ்சாவூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது தொடர்பாக...

Updated On : 2 மார்ச் 2026, 12:05 pm IST
விஜய் - Photo: TVK
பகிர்:

தஞ்சாவூரில் மார்ச் 4-ல் விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகிகள் காவல் துறையினரிடம் மனு அளித்திருந்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி நிர்வாகிகளைத் தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மார்ச் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்றும் இவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து திடலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தஞ்சை தவெக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி, மாவட்டக் காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இரா. ராஜாராமிடம் தவெக மத்திய மாவட்டச் செயலர் ஆர். விஜய் சரவணன் உள்ளிட்டோர் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

The police department has granted permission for the Tvk executives' meeting that Vijay will attend on March 4 in Thanjavur.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.