வெள்ளியங்கிரி மலையில் மீண்டும் சோகம்: மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி!
வெள்ளியங்கிரி மலைக் கோயிலில், மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் பலியான சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளியங்கிரி மலைக் கோயிலில், மலையேற்றத்தின் போது பக்தர் ஒருவர் பலியான சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒன்றாவது மலைப் பாதையில் உள்ள குரங்கு பாலம் அருகே நேற்று இரவு சுமார் 11:30 மணி அளவில் பக்தர் ஒருவர் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், அவர் கோவை கெம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் என தெரியவந்தது. செங்குத்தான பாதையில் மலையேறிக் கொண்டு இருந்த போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் நிலைகுலைந்து சரிந்து உள்ளார்.
Advertisement
Advertisement
தகவல் கிடைத்த உடனே வனப் பணியாளர்கள் மற்றும் டோலி தூக்கும் சுமைப் பணியாளர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர். இருப்பினும், அவரைப் பரிசோதித்த போது அவர் ஏற்கெனவே பலியானது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவரது உடலை டோலியில் கட்டி, கரடுமுரடான மலைப்பாதை வழியாகப் பூண்டி அடிவாரம் நோக்கி கொண்டு வந்தனர். இதுகுறித்து ஆலாந்துறை காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோடைக் காலம் தொடங்கி மலைப் பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் வேளையில், போதிய உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு பின்னரே பக்தர்களை அனுமதித்து வரும் நிலையில், பக்தர் ஒருவர் சுயநினைவின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர் உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பக்தர் பலியாகியிருப்பது பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A devotee from covai died while climbing down the Velliangiri hills after offering prayers on sunday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.