லூப் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு தள்ளுபடி
கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆனந்த் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் உத்தரவிட்டது. ஆனால், லூப் சாலையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் உணவகங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இதுதொடா்பாக உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மீண்டும் எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினா்.
Advertisement
Advertisement
உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத்தான் தாக்கல் செய்ய முடியும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து மனுதாரா் தரப்பில் மனுவைத் திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப்பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.