முகப்பு
தமிழ்நாடு

கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார்.

கலைஞர் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின் - X
பகிர்:

தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக மட்டுமின்றி இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய அளவிலான வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசியல் ரீதியான பல மாற்றங்கள் வரும் காலங்களில் ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

அதற்கேற்றவாறு தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக் கணிப்புகளும் தீர்க்கமான முடிவைக் கூறமுடியாதபடி வெளியாகியுள்ளன.

தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் திமுக, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அதிமுக, புதிதாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தவெக, நாதக ஆகிய கட்சிகள் தேர்தல் முடிவை நோக்கி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.

இந்த நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்றுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் சேகர்பாபு, ஆ.ராசா எம்.பி. ஆகியோரும் அங்கு சென்ற நிலையில் அதுதொடர்பான புகைப்படம் மற்றும் காணொலி வெளியாகியுள்ளது.

summary

Chief Minister Stalin has visited the Kalaignar Memorial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments