புதுச்சேரியில் வெற்றி வாய்ப்பை இழந்த முக்கிய பிரபலங்கள்
புதுச்சேரியில் முக்கிய பிரபலங்கள் பலரும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
புதுச்சேரியில் முக்கிய பிரபலங்கள் பலரும் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் வெ. வைத்திலிங்கம் (காங்கிரஸ்) முதல்வர் என்.ரங்கசாமியிடம் தோல்வி அடைந்தார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் மணவெளி தொகுதியில் தோல்வி அடைந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி. ராமு (தவெக) வெற்றி பெற்றார். இவருடைய வெற்றியின் மூலம் இக் கட்சி சட்டப்பேரவைக்குள் முதலில் செல்கிறது.
பாஜக புதுச்சேரி தலைவர் வி.பி.ராமலிங்கம் ராஜ்பவன் தொகுதியில் தோல்வியைச் சந்தித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ப. கண்ணனின் மகனும் திமுக வேட்பாளருமான விக்னேஷ் கண்ணன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு முதல் முறையாகச் செல்கிறார்.
Advertisement
Advertisement
முன்னாள் அமைச்சர் மு. கந்தசாமி ஏம்பலம் (தனி) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இ.மோகன்தாஸ் இப்போது என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தோல்வியடைந்த எம்.எல்.ஏக்கள்
இப்போது எம்.எல்.ஏக்களாக உள்ள உப்பளம் தொகுதி அனிபால் கென்னடி (திமுக), கதிர்காமம் தொகுதி கேபிஎஸ் ரமேஷ், நெடுங்காடு தொகுதி (தனி) சந்திரபிரியங்கா ( என்.ஆர். காங்கிரஸ்)லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட மு. வைத்தியநாதன், முத்தியால்பேட்டை தொகுதியில் சுயேச்சை எம்.எல்.ஏவாக இருந்து இப்போது தவெக சார்பில் போட்டியிட்ட பிரகாஷ்குமார், யேனம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ கொல்லப்பள்ளி அசோக்குமார் இப்போது காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். இதைத் தவிர முன்னாள் அரசு கொறடா மணவெளி தொகுதியில் தோல்வி அடைந்தார்.
Many prominent figures lost their chance of victory in Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.