முகப்பு
தமிழ்நாடு

தவெகவினர் உற்சாக வரவேற்பு! வெற்றி சான்றிதழ் பெறுகிறார் விஜய்!!

தவெகவினர் அளித்த உற்சாக வரவேற்புக்கு இடையே வெற்றி சான்றிதழ் பெறுகிறார் விஜய்

தவெக தலைவர் விஜய் - File photo
பகிர்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், வெற்றி சான்றிதழ் பெற நுங்கம்பாக்கம் வருகிறார்.

அவரை, தவெக தொண்டர்கள் சாலையில் திரண்டு நின்று உற்சாகமாக வரவேற்று வருகிறார்கள்.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி என இரண்டிலும் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், வெற்றி சான்றிதழ் பெற்றுக் கொள்ள நீலாங்கரையில் உள்ள தனது வீட்டிலிருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையம் செல்கிறார்.

Advertisement

Advertisement

நீலாங்கரை வீட்டிலிருந்து புறப்பட்ட விஜய், அடையாறு சென்று தன்னுடைய பெற்றோரிடம் ஆசி பெற்றுக்கொண்டார். அங்கு திரண்டிருந்த ரசிகர்களை நோக்கி அவர் கையசைத்து நன்றி தெரிவித்துக் கொண்டார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு நுங்கம்பாக்கம் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜய் வரும் வழியெங்கும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று வரவேற்றுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெளியே வரும் விஜய், வெற்றி குறித்து என்ன சொல்லப் போகிறார் என்பது எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது.

திருச்சி கிழக்கு - மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரது சார்பாக மாற்று வேட்பாளராக பதிவு செய்த சிரஞ்சீவி என்பவர் வெற்றி பெற்ற சான்றிதழை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டியனிடம் பெற்றுக் கொண்டார்.

summary

Vijay receives victory certificate amidst enthusiastic reception from the audience

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments