புதுச்சேரியில் காலூன்றிய தவெக
புதுச்சேரியில் தவெக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் தவெக முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் மணவெளி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட பி.ராமு வெற்றி பெற்றார். இவர், இக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ.
Advertisement
Advertisement
இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தற்போதைய சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வத்தைத் தோற்கடித்தார்.
புதுச்சேரியில் தொடங்கப்பட்ட புதிய கட்சியான நமது மக்கள் கழகம் என்ற கட்சியுடன் 2 தொகுதிகளிலும் கூட்டணியாகவும் மீதியுள்ள 28 தொகுதிகளிலும் தனித்தும் போட்டியிட்ட தவெக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
அதனால் இந்தக் கட்சியின் விசில் சின்னத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.
TVK has registered its first victory in Puducherry.