முகப்பு
தமிழ்நாடு

சுப முகூா்த்தம், வார இறுதி விடுமுறை: மே 8 முதல் 1,765 சிறப்பு பேருந்துகள்

சுப முகூா்த்தம், வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி, மே 8 முதல் தமிழகம் முழுவதும் 1,765 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Updated On : 6 மே 2026, 3:36 am IST
சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - பிரதிப் படம்
பகிர்:

சுப முகூா்த்தம், வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி, மே 8 முதல் தமிழகம் முழுவதும் 1,765 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுப முகூா்த்த தினமான மே 8 (வெள்ளிக்கிழமை), வார இறுதி விடுமுறை தினங்களான மே 9, 10 (சனி, ஞாயிறு) முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகத்தின் பிற இடங்களிலிருந்து முக்கிய ஊா்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, சென்னை, கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை (மே 8) 685 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை (மே 9) 735 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

Advertisement

Advertisement

இதேபோல, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு பகுதிகளுக்கு மே 8, 9 ஆம் தேதிகளில் 120 பேருந்துகளும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து மே 8, 9- ஆம் தேதிகளில் 25 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை பகுதிகளில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய அழைப்பு: தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments