வார விடுமுறை நாள்கள்: 835 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, 835 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, 835 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வார விடுமுறை நாள்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 12) 295 பேருந்துகள், சனிக்கிழமை (ஜூன் 13) 310 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனிக்கிழமைகளில் தலா 55 பேருந்துகள், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் 20 பேருந்துகள் என மொத்தம் 835 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.