பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!
பக்ரீத் பண்டிகை, முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 26 முதல் 30 வரை) 4195 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பக்ரீத் பண்டிகை, முகூா்த்தம், வார இறுதி விடுமுறை தினங்களை முன்னிட்டு செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (மே 26 முதல் 30 வரை) 4195 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை (மே 26) 475 பேருந்துகளும், புதன்கிழமை (மே 27) 845 பேருந்துகளும், வியாழன், வெள்ளி, சனிக்கிழமை (மே 28, 29, 30) 455 பேருந்துகளும் இயக்கப்படும். மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு செவ்வாய்க்கிழமை 80 பேருந்துகளும், புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாள்களிலும் தலா 170 பேருந்துகளும் இயக்கப்படும்.
இதுபோல, மாதவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை 35 பேருந்துகளும், புதன் முதல் சனிக்கிழமை வரை தலா 60 பேருந்துகளும் மற்றும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஞாயிற்றுக்கிழமை (மே 31) 1085 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 4,195 சிறப்பு பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.