முகப்பு
தமிழ்நாடு

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்து வருகின்றது.

கனமழை - file photo
பகிர்:

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பரவலாக பலத்த மழை பெய்ததால், நகர் முழுவதும் குளிர்ச்சியை ஏற்படுத்தியது.

கத்தரி வெய்யில் மே 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த சில நாள்களாகவே வெய்யில் சுட்டெறித்து வந்தது. பல இடங்களில் வெய்யில் சதம் அடித்தும் வந்தது.

இந்த நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், குளிர்ந்த காற்றும் நிலவி வந்த நிலையில் சட்டென்று வானிலை மாறி மழை மேகங்கள் உருவானதையடுத்து, பலத்த மழை பெய்ய தொடங்கியது.

Advertisement

Advertisement

அம்பத்தூர், பாடி, அன்னாநகர், கிண்டி, பல்லாவரம், சாலிகிராமம், வடபழனி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோபாலபுரம், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், தேனாம்பேட்டை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

தமிழ்நாட்டில் இன்று (மே 6) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல்
மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

Widespread heavy rains across Chennai and its suburbs brought a cooling effect to the entire city.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments