முகப்பு
தமிழ்நாடு

சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா மே 10 காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது

விஜய் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை : தமிழக முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் பதவியேற்கும் விழா மே 10 காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, சென்னை ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், பதவியேற்பு விழாவையொட்டி நேரு விளையாட்டரங்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

summary

Chennai: Security tightened at Jawaharlal Nehru Stadium ahead of Vijay’s swearing-in ceremony as Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments