விசிக பதவிகளைக் கேட்டதாக வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை!
விசிக பதவிகளைக் கேட்டதாக வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை என எம்.பி. ரவிக்குமார் தெரிவித்தது குறித்து...
விசிக பதவிகளைக் கேட்டதாக வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை என எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தவெக தலைமையில் ஆட்சியமைக்க118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பதால் காங்கிரஸ் தனது 5 உறுப்பினர்களுடன் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது.
மேலும், இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கான ஆதரவை நேற்று (மே 8) தெரிவித்தது. அதிகாரப்பூர்வமாக விசிக ஆதரவு தெரிவிக்குமா? இல்லையா? என்பது குறித்து இன்று தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கூட்டணிக்கு வருவதற்கு விசிக சார்பில் தவெகவிடம் பதவிகளைக் கேட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.
இதுகுறித்து விசிக எம்.பி. ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்ததாவது:
”வேண்டுகோள்
விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
MP Ravikumar has stated that reports claiming the VCK sought party posts are contrary to the truth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.