எங்க வீட்டுப் பையன், அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்: பிரேமலதா விஜயகாந்த்
முதல்வராகப் பதவியேற்கவுள்ள விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து தெரிவித்தது குறித்து...
தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்க உள்ள தெவெக தலைவர் விஜய்க்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் தவெகவின் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை முதல்வராக நியமித்து அதற்கான உத்தரவை சனிக்கிழமை (மே 9) வழங்கினார். இதனையடுத்து, இன்று காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார்.
இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
“தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டுப் பையன் தம்பி விஜய் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும். அன்பு தம்பி விஜங் அவர்களுக்கு கேப்டன் அவர்களின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
DMDK General Secretary Premalatha Vijayakanth has extended her wishes to TVK leader Vijay, who is set to assume office as the Chief Minister of Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.