ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை! பிரேமலதா விஜயகாந்த்
ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தது பற்றி...
ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை என்று தேமுதிகவின் பொதுச்செயலரும் எம்எல்ஏவுமான பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை (ஜூன் 18) பேசியுள்ளார்.
கடந்த மே 10 ஆம் தேதி முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனர். அதைத் தொடர்ந்து, மே 13 ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் தொடங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், அதனைத் தொடர்ந்து தேசியகீதமும் பாடப்பட்டது. ஆளுநர் உரைக்கு பின்னரும் இரண்டாவது முறையாக தேசிய கீதம் பாடப்பட்டது.
இதுகுறித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்றைய ஆளுநரின் உரை ஆளுங்கட்சி தரப்புக்கு ஆதரவாக இருந்தது. தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை நாம் வரவேற்போம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆளும் தரப்புக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை” என்று தெரிவித்தார்.
DMDK General Secretary and MLA Premalatha Vijayakanth stated on Thursday (June 18) that the Governor's address was in support of the Governor's side.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.