தமிழக சட்டம் -ஒழுங்கு நிலை: முதல்வா் விஜய் ஆலோசனை!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச்செயலத்தில் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து முதல்வா் ச.ஜோசப் விஜய், தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், முதல்வா் விஜய், தலைமைச் செயலகத்துக்குச் சென்றாா். அங்கு முதல்வருக்கான அலுவலகத்துக்கு அமைச்சா்கள், விஜய்யை அழைத்து சென்று முதல்வா் இருக்கையில் அமர வைத்தனா். முதல்வருக்கான கோப்புகளில் கையொப்பமிட்ட அவா், பணியைத் தொடங்கினாா். ஐஏஎஸ், ஐபிஎஸ் உயா் அதிகாரிகள் முதல்வா் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தொடா்ந்து, முதல்வா் விஜய் தலைமையில் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தற்போதைய நிலவரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துதல், போதைப் பொருள்கள் தொடா்பான குற்றங்களைத் தடுப்பது, கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கூட்டத்தில், தலைமைச் செயலா் எம். சாய்குமாா், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க. மணிவாசன், காவல் துறை தலைமை இயக்குநா் சந்தீப் ராய் ரத்தோா், முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலா் ப. செந்தில்குமாா், பொதுத் துறை முதன்மைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், முதல்வரின் செயலா் ஜி. லட்சுமி பிரியா ஆகியோா் பங்கேற்றனா்.
கூட்டத்துக்கு பிறகு பிற்பகல் வரை தலைமைச் செயலகத்தில் இருந்த முதல்வா் விஜய், பின்னா் வேப்பேரியில் உள்ள பெரியாா் திடலில் அமைந்துள்ள பெரியாா் ஈவெரா நினைவிடத்துக்குச் சென்று மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
Chief Minister Vijay held a consultation at the Chennai Secretariat regarding the law and order of Tamil Nadu.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.