சட்டம் - ஒழுங்கு: ஆரம்பத்திலேயே தடுக்காதது ஏன்? 11 மாதங்களாக டிஜிபியே இல்லை! விஜய்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசியது பற்றி....
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளை ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாமே? என திமுகவினருக்கு முதல்வர் விஜய் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்து பேசி வருகிறார்.
அப்போது அவர் பேசுகையில்,
Advertisement
Advertisement
"தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. பெண்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அதற்காக சிங்கப்பெண் அதிரடிப் படை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் பரவிக் கிடக்கிறது. நான் சொன்ன பிரச்னைகள் அனைத்தும் பல ஆண்டுகள் கண்டுகொள்ளாமல் விட்ட பிரச்னைகள்தான். இதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாமே...
எதிர்க்கட்சிகள் கேட்கும்போது அக்கறையாக தெரியவில்லை. அவதூறு அரசியலாகத்தான் தெரிகிறது. எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்சி என்பதால் ஆட்சி மீது ஆயிரம் பழிகளைப் போடலாம்.
கடந்த 11 மாத காலமாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபி இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த சம்பவங்களுக்கு தற்போது விடையைக் கண்டுபிடிக்கிறோம்.
இதை ஆரம்ப நிலையிலேயே யார் கட்டுப்படுத்த வேண்டும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதனைச் செய்யாதது ஏன்?
எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி கேட்க, விமர்சனம் செய்ய உரிமை உண்டு. எதிர்க்கட்சிகள் தாங்கள் செய்ததை யோசித்து பின்னர் நடுநிலையாகப் பேசினால் நன்றாக இருக்கும்" என்று பேசினார்.
CM vijay speech in TN Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.