ஆம்பூர் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் 3 பேர் பலி
ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் மூவர் பலியாகினர்.
ஆம்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள்கிழமை ஆகிய இரு நாட்களில் வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் மூவர் பலியாகினர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கிரிசமுத்திரம் புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்த காளி மகன் சரவணன்(47) கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றார். மாராப்பட்டு அருகே சாலையைக் கடக்க முயன்றபோது வேலூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற கார் மோதியதில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர் .
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
Advertisement
Advertisement
மின்னூரில் .....
மின்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்
சாலை கடக்க முயன்ற சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
விண்ணமங்கலம்.....
காட்பாடியைச் சேர்ந்த சார் பதிவாளர் ஞான செல்வன் என்பவர் வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி காரில் சென்றார்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்து அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வெவ்வேறு இருசக்கர வாகனங்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாப்பனப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (45) பலியானார்.
படுகாயம் அடைந்த சார்பதிவாளர் ஞான செல்வன் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற காமனூர் தட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (32) ஆகிய இருவரும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துகள் குறித்து ஆம்பூர் கிராமிய நிலைய போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
Three people died in road accidents that occurred at different locations near Ambur on Sunday and Monday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.