ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளில் தொடர் திருட்டு: 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நிற்கும் லாரிகளில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
ஆம்பூர் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து செல்போன்களை திருடியது தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உடையராஜாபாளையம் பகுதியில் சென்னை - பெங்களூரு, பெங்களூரு - சென்னை செல்லும் லாரி மற்றும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள், தங்களின் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்திவிட்டு, ஹோட்டல்களில் சாப்பிட்டு ஓய்வெடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக சாலையோரம் நிற்க வைக்கும் லாரிகளில் லாரி ஓட்டுநர்களின் செல்போன்கள் தொடர்ந்து திருடுபோவதால் லாரி ஓட்டுநர்கள், ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
புகாரின்பேரில், போலீஸார் குற்றவாளிகளைப் பிடிக்க கிராமிய காவல் ஆய்வாளர் எழில்தாசன் தலைமையிலான போலீஸார் தொடர்ந்து இரவுநேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் உடையராஜாபாளையம் பகுதியை சேர்ந்த குரு பிரசாத் (23), சாரதி (23), தமிழரசன் (25), மஞ்சன் (42), வினோத் குமார் (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரித்ததில் சாலையோரம் நிற்க வைக்கும் லாரிகளில் அவர்கள் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களிடமிருந்து 9 விலையுயர்ந்த செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
Series of Thefts from Lorries on Ambur National Highway: 7 Arrested, Including 2 Minors
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.