முகப்பு
தமிழ்நாடு

திருமாவளவனிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்!

ஆட்சி அமைக்க தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த பிறகு முதல்முறையாக திருமாவளவனை முதல்வர் விஜய் சந்தித்தது குறித்து...

திருமாவளவனுடன் விஜய் சந்திப்பு - DIPR
பகிர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று இன்று (மே 12) சந்தித்தார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த பிறகு முதல்முறையாக திருமாவளவனும் விஜய்யும் சந்தித்துக்கொண்டனர்.

சென்னை வேளச்சேரியில் உள்ள திருமாவளவன் இல்லத்திற்கு முதல்வர் விஜய் இன்று சென்றார். அவரை வாசலுக்கே வந்து திருமாவளவன் வரவேற்று அழைத்துச் சென்றார். விசிக எம்.எல்.ஏ., வன்னி அரசு, சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement

Advertisement

வீட்டில் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர், அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை விசிக சார்பில் விஜய்க்கு பரிசாக வழங்கினார்.

முன்னதாக சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் விஜய் சென்றிருந்தார். அங்கு அக்கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் சார்பில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவகத்துக்குச் சென்று செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோரை முதல்வர் விஜய் சந்தித்தார்.

தொடர்ந்து, சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள சி.வி. சண்முகம் அலுவலகத்திற்குச் சென்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரை சந்தித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை அவர்களின் வீட்டிற்குச் சென்று நேற்று (மே 11) முதல்வர் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Chief Minister C. Joseph Vijay receives blessings from VCK Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments