முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்; ஆனால், திமுகதான் சீனியர் - உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர்ஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதைப் பற்றி...

முதல்வர் விஜய்யுடன் உதயநிதி ஸ்டாலின். - படம்: எக்ஸ்.
பகிர்:

முதல்வர் விஜய்யும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர்ஸ் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பேரவைத் தலைவராக ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அவரை அவை முன்னவர் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அவைத் தலைவர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரை வாழ்த்தி அனைத்துக் கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

தொடர்ந்து பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது உரையைத் தொடங்கினார்.

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நானும் முதல்வர் விஜய்யும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். ஆனால், அரசை நடத்துவதில் திமுகதான் சீனியர் பேட்ச்.

1967 ஆம் ஆண்டிலேயே ஆட்சிக்கு வந்தது திமுகதான். அந்த வகையில் எங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் நாங்கள் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள நீங்களும் தயாராக இருங்கள். ஏன்னென்றால் நமக்கு தமிழ்நாட்டின் மாநில நலன்தான் மிகவும் முக்கியம்” என்றார்.

summary

"Chief Minister Vijay and I studied at the same college. However, the DMK are the 'seniors' when it comes to running the government," stated Leader of the Opposition Udhayanidhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.