தவெகவுக்கு 33% வாக்குகள்; எதிர்க்கட்சிகளுக்கு 66% வாக்குகள்: பேரவையில் இபிஎஸ் பேச்சு
அதிமுகவின் ஒரு தரப்புக்கு மட்டும் விஜய் ஆதரவு தருவது ஏன்? இது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு...
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மக்கள் 33% வாக்களித்துள்ளதாகவும், எஞ்சிய 66% வாக்குகள் எதிர்க்கட்சியினருக்கே கிடைத்துள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மே 13) தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் அதிமுக சார்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க செயல்படுவதுதான் எங்கள் நோக்கம் எனக் கூறினார்.
Advertisement
Advertisement
முதல்வர் முன்மொழிந்தால் அதை ஏற்கிறேன், அல்லது எதிர்க்கிறேன் என்று வழிமொழிவதுதான் மரபு என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அவையில் 4 முறை நம்பிக்கையில்லா தீர்மானம் வந்துள்ளது. ஏன் நம்பிக்கை; ஏன் நம்பிக்கை இல்லை எனப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசின் தீர்மானம் என்ற காரணத்தால் வழிமொழியத் தேவையில்லை.
அதிமுகவில் 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். ஆளும் கட்சிக்கு 33 சதவிகித வாக்குகள்தான் கிடைத்துள்ளன. 66% வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்.
அதிமுகவின் ஒரு தரப்புக்கு மட்டும் விஜய் ஆதரவு தருவது ஏன்? ஒரு தரப்புக்கு ஆதரவு தெரிவித்தால் அது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும். தற்போது தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதற்கான அடித்தளம் அதிமுக அமைத்ததுதான் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
33% of Votes for TVK; 66% for Opposition Parties: EPS Speaks in the Assembly
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.