பள்ளிகளுக்கு இலவச சீருடை, விலையில்லா பாடப்புத்தகம் விநியோகம்!
பள்ளிகளுக்கு இலவச சீருடை, விலையில்லா பாடப்புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது குறித்து...
ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
2026-27ஆம் கல்வியாண்டு தொடங்கும் முன்னர் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி), வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பள்ளி வளாகம், அனைத்து வகுப்பறைகள், சமையலறை, கழிப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகிய இடங்கள் துப்பரவாகவும் தூய்மையாகவும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
2. வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் மேசை மற்றும் நாற்காலி மற்றும் மாணவர் அமர்ந்து பயிலும் பலகைகள் மற்றும் மேசைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள அனைத்து தளவாட பொருள்களையும் சுத்தபடுத்தி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் செய்து வைத்து இருக்க வேண்டும்.
3. தேசியக் கொடி ஏற்றும் கொடிக் கம்பம் முறையாக சீர் செய்யப்பட்டு குறைபாடுகள் ஏதும் இல்லாத வகையில் உரிய வர்ணப் பூச்சுகளை மேற்கொண்டு தொடர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
4. பள்ளியின் பெயர் பலகை தொலைவில் இருந்து பார்க்கப்படும்பொழுது பொதுமக்களின் பார்வைக்கு நன்கு புலப்படும் வகையில் வர்ணப் பூச்சுகளைக் கொண்டு எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
5. தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள திறன் பலகைகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்களை முறையாக சுத்தப்படுத்தி மாணவர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தயார் செய்து வைத்து இருக்க வேண்டும். இணைய வசதி உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
6. பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கணினிகள், மடிகணினிகள் மற்றும் கைக் கணினிகளை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
7. சத்துணவு தயார் செய்யப்படும் சமையலறை கரிபடிந்த நிலையிலோ, தூசி படிந்த நிலையிலோ அல்லது சிலந்தி வலைகளுடனோ அசுத்தமாக இருத்தல் கூடாது.
8. கழிப்பறைகள் மாணவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உரிய நீர் வசதியுடன் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்.
9. கழிப்பறை கழிவு சேகரிப்பு தொட்டிகள், கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் பள்ளி வளாகத்தில் திறந்த நிலையில் இல்லாதவாறு மூடியிட்டு மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் பராமரிக்கப்பட வேண்டும்.
10. ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் மேற்படி அமைப்புகள் இருக்கும்பட்சத்தில் அவற்றின் ஸ்திரத் தன்மை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் உள்ளிட்ட 21 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மேலும், 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை, விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் அச்சிடும் பணிகள் முடிவடைந்து விநியோகம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
With schools set to reopen in June, the School Education Department has issued guidelines.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.