தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,480 குறைந்தது! மாலை நிலவரம்...
இன்றைய தங்கம் விலை நிலவரம் பற்றி...
சென்னையில் இன்று(மே 15) காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ. 1,480 குறைந்துள்ளது.
நாட்டின் பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றினால் ஓராண்டுக்கு மக்கள் யாரும் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.
இதையடுத்து புதன்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ. 3,200 குறைந்து, ரூ. 1,20,000 -க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை ரூ. 400 உயர்ந்து, ரூ. 1,20,400 -க்கு தங்கம் விற்பனையானது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்த நிலையில் மாலையில் ரூ. 1,480 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,18,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 185 குறைந்து ரூ. 14,765-க்கு விற்பனையாகிறது.
இதன் மூலமாக தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 2,280 குறைந்துள்ளது.
இதனிடையே, வெள்ளியின் விலை இன்று காலை கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்தது. ஒரு கிராம் ரூ. 305 -க்கும், ஒரு கிலோ ரூ. 3,05,000 -க்கும் விற்பனையாகிறது. மாலை வெள்ளி விலையில் மாற்றமில்லை.
Chennai gold and silver rate today evening (may 15)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.