ககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!
தமிழகத்தில் 17 உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றப்பட்டுள்ளது குறித்து...
உணவுத் துறை செயலராக அமுதாவும், நகராட்சி நிர்வாகத் துறை செயலராக ககன் தீப் சிங் பேடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணிஇடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திங்கள்கிழமை ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்பாக தலைமைச் செயலர் எஸ்.சாய்குமார் வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குறிக்குள் முந்தைய பணியிடம்):
ககன்தீப் சிங் பேடி- நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ( ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர்).
Advertisement
Advertisement
பி.அமுதா - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலர் ( வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர்).
சத்யபிரத சாஹூ- நீர்வளத்துறை முதன்மைச் செயலர் ( இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர்).
சுன்சோங்கம் ஜடக் சிரு - பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் (போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர்).
அனில் மேஷ்ரம் - எரிசக்தித் துறை முதன்மைச் செயலர் (கனிமவள நிறுவன நிர்வாக இயக்குநர்).
எம்.வள்ளலார் - போக்குவரத்துத் துறை செயலர் (மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர்)
கே.எஸ்.பழனிசாமி - வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் (கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர்)
வி.தட்சிணாமூர்த்தி - பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை செயலர் (வேளாண் உற்பத்தி ஆணையர்-உழவர் நலத்துறை செயலர்).
சஜ்ஜன்சிங் ஆர் சவான் - இளைஞர் நலன், விளையாட்டுத் துறை செயலர் ( திட்டம், வளர்ச்சித் துறை செயலர் )
பிரசாந்த் மு.வடநரே - ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை செயலர் (நிதித் துறை செலவினப் பிரிவு செயலர்)
ஜி.கே.அருண்சுந்தர் தயாளன் - பதிவுத்துறை தலைவர் ( நிதித் துறை சிறப்பு செயலர்)
ஜி.லட்சுமிபதி - இணைச் செயலர் (முன்னாள் முதல்வரின் இணை செயலர்)
டி.ஆனந்த் - சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் (ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர்).
ஏ.ஆர்.ராகுல்நாத் - சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை இயக்குநர்).
ஜி.எஸ்.சமீரன் - சென்னை மாநகராட்சி ஆணையர் (குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர்).
எம்.ஆர்த்தி - தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் (முன்னாள் துணை முதல்வரின் கூடுதல் செயலர்).
தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் (பதிவுத்துறை தலைவர்).
17 senior IAS officers in Tamil Nadu have been transferred today (May 18).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.