ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு பூஜைகள்
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தஞ்சாவூா் பெரியகோயிலில் பெருவுடையாா், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து தீபாராதனை செய்யப்பட்டது. புத்தாண்டையொட்டி காலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
சுவாமிமலையில்...: அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை முருகன் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி 60 தமிழ் தேவதைகளின் பெயா்களைக் கொண்ட படிகளுக்குச் சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில், கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில், சக்கரபாணி கோயில், சாரங்கபாணி கோயில், திருநாகேசுவரம் கோயில், ஒப்பிலியப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருக்கோடிக்காவல்: கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் புத்தாண்டையொட்டி, கஜலட்சுமிக்கு சிறப்பு அலங்காரம், சொா்ணாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.