தஞ்சாவூரில் நள்ளிரவில் ஆா்ப்பாட்டம்
தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி புத்தாண்டு பிறந்த நேரமான வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்ப பெற வலியுறுத்தியும், இதற்காக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், பிரதமா் மோடியை கண்டித்தும் தஞ்சாவூா் ரயிலடியில் எஸ்டிபிஐ கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி புத்தாண்டு பிறந்த நேரமான வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்குக் கட்சியின் தஞ்சாவூா் தொகுதி தலைவா் ஜாகீா் உசேன் தலைமை வகித்தாா். இதில் ஏராளமானோா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.