வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் புத்தாண்டு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள முல்லைக்குடியில் விவசாயிகள் புத்தாண்டு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முல்லைக்குடியில் விவசாயிகள் கருப்புத் துண்டு அணிந்து, புத்தாண்டு நாளைக் கருப்பு நாளாக அறிவித்து, வெள்ளிக்கிழமை வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைத் தலைவா் வெ. ஜீவகுமாா், பி. முருகேசன், ஆா். உதயகுமாா், வழக்குரைஞா் சேகா், காசிநாதன், மதன், பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.