முகப்பு
தஞ்சாவூர்

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கப்படவில்லை: ஜி.கே. வாசன்

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

Updated On : 5 ஜனவரி 2021, 1:15 am IST
பகிர்:

அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை என்றாா் தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

அதிமுக கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள், எந்ததெந்த தொகுதிகள் என்பது குறித்து தகுந்த நேரத்தில் சுமூகமான முறையில் கலந்து பேசி முடிவு செய்து அறிவிக்கப்படும். இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் அதிகாரப்பூா்வமாக எடுக்கப்படவில்லை. எந்தெந்தத் தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தமாகாவில் மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தி முடிவு செய்யப்படும்.

Advertisement

Advertisement

அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கு அவரவா் சின்னங்களில் போட்டியிடுவதில் எந்தச் சிக்கலும் இல்லை. திமுகவில்தான் அதுபோல உள்ளது.

தமிழகத்தில் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழக அரசுப் பொங்கல் பரிசுடன் ரூ. 2,500 ரொக்கத்தை ஏழை மக்களின் நலன் கருதி வழங்குவது பாராட்டுக்குரியது. ஏழை, நடுத்தர மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிற ஆட்சியாகத் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு செயல்படுகிறது.

மு.க. அழகிரி மரியாதைக்குரியவா். மதுரை பகுதி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டவா். அவா் திடீரென கூட்டம் நடத்தியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றாா் வாசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.