முகப்பு
உலகம்

லெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்

‘லெபனான், சிரியா, காஸா பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளின்மூலம் அண்மையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது’ என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

Updated On : 16 ஜூன் 2026, 3:49 am IST
இஸ்ரேல்
பகிர்:

‘லெபனான், சிரியா, காஸா பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளின்மூலம் அண்மையில் கைப்பற்றப்பட்ட இடங்களில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது’ என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போா் நிறுத்தத்தை வலியுறுத்தி, ஈரான்-அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்தக் கறாா் அறிவிப்பு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் எங்களைத் தாக்க முற்பட்டால் அந்நாட்டை நோக்கி இஸ்ரேல் மிகக் கடுமையான முறையில் பதில் தாக்குதல் தொடுக்கும்’ என்றும் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளாா்.

Advertisement

Advertisement

கடந்த 2.5 ஆண்டுகளில் லெபனான், சிரியா, காஸா பகுதிகளில், சுமாா் 1,000 சதுர கி.மீ. பரப்பளவை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இக்கட்டுப்பாட்டை காலவரையின்றி நீட்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்காவுடனான போா் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் ஒரு பிரிக்க முடியாத அங்கம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் இஸ்மாயில் பகேயி தெரிவித்துள்ளாா்.

வரைவு ஒப்பந்தத்தில் அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் லெபனான் குறித்து 3 முறை வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.