FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

காஸாவில் மீண்டும் போர்; பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்! - இஸ்ரேலிய அமைச்சர் பேச்சு!

காஸாவில் மீண்டும் போரைத் தொடங்குவது காலத்தின் கட்டாயம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பேச்சு...

16 செப்டம்பர் 2026, 3:59 pm IST
இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் இறுதிச்சடங்கு... - கோப்புப் படம் | ஏபி
பகிர்:

காஸாவில் மீண்டும் போரைத் தொடங்கி, அங்குள்ள பாலஸ்தீனர்களை வெளியேற்றுவது காலத்தின் கட்டாயம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் வலதுசாரி ஆர்வலர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு எதிரான இஸ்ரேலின் போரால், காஸாவின் மக்கள் தொகையில் சுமார் 70 சதவிகிதம் பேரை வெளியேற்றிவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஹமாஸ் படையிடம் இருந்து மீதமுள்ள பிணைக் கைதிகளை விடுவிப்பது மற்றும் ஹமாஸை ஆயுதம் நீக்கம் செய்வது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் மற்றும் காஸா இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இதுபற்றி இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில்,

“ஹமாஸ் படையை அழிப்பதற்கான உத்தரவு கிடைத்தவுடன், அந்தப் பணியை முழுமையாக முடிக்கவும், அதையடுத்து, பாலஸ்தீனர்களை இடம்பெயர வைக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் இஸ்ரேலிய ராணுவம் தயார்நிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, காஸாவில் உள்ள 20 லட்சம் பாலஸ்தீனர்களை கடல் மற்றும் வான்வழியாக வெளியேற்றுவதற்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதி அளிப்பது குறித்து அமெரிக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் இஸ்ரேல் காட்ஸ் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியதைத் தொடர்ந்து, காஸாவில் இருக்கும் மக்களை அவர்களின் விருப்பம் இல்லாமல் வெளியேற்றும் திட்டமில்லை என அமெரிக்க அரசு விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Israeli Minister Israel Katz has stated that resuming the war in Gaza and expelling the Palestinians there is a necessity of the times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments